வட கொரிய-அமெரிக்க உறவின் மேம்பாட்டுக்கு வட கொரியா வேண்டுகோள்

வான்மதி 2018-08-19 15:48:35
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்ப் உள்நாட்டின் எதிர்ப்பு சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டாமல், வட கொரிய-அமெரிக்க உறவின் தேக்க நிலையைத் தகர்த்தவும் இருதரப்புறவை மேம்படுத்தவும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று வட கொரியாவின் ரோடொங் சின்முன் எனும் செய்தியேட்டில் 18ஆம் நாள் வெளியான விமர்சனக் கட்டுரையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

வட கொரிய-அமெரிக்க உறவின் மேம்பாட்டுக்கு வட கொரியா வேண்டுகோள்

சிங்கப்பூரில் இருநாட்டுத் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, கூட்டறிக்கையை வெளியிடதற்கு உலகின் பாராட்டுக்கள் கிடைத்தன. ஆனால் 2 மாதங்களுக்குப் பின் இருதரப்புறவு தேக்க நிலையில் சிக்கியுள்ளது. அமெரிக்காவின் உட்புற அரசியல் போராட்டம் இதற்கு காரணமாகும். தற்போதைய தேக்க நிலையை மாற்ற, அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் துணிவுடன் கூடிய உறுதியான முடிவெடுக்க வேண்டும் என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்