சீன வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பு பற்றிய கேட்டறிதல் கூட்டம் தொடக்கம்

தேன்மொழி 2018-08-21 11:39:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பு பற்றிய கேட்டறிதல் கூட்டம் தொடக்கம்

சீன வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பு பற்றிய கேட்டறிதல் கூட்டம் தொடக்கம்

20ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பது பற்றிய வெளிப்படையான கேட்டறிதல் கூட்டத்தை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் 20ஆம் நாள் துவங்கியது. அமெரிக்கா வெளியிடும் இறுதியான வரி வசூலிப்புப் பட்டியலுக்கு உரிய ஆலோசனைகள் இக்கூட்டத்தில் வழங்கப்படும். அதோடு, பொதுவான வரிவிகம் 10விழுக்காட்டிலிருந்து, 25விழுக்காடாக உயர்த்தப்படுமா இல்லையா என்பதும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

வரிவிகிதத்தின் அதிகரிப்பினால், அமெரிக்க நுகர்வோர், தொழில் நிறுவனம் மற்றும் தொடர்புடைய பொருளாதாரத் துறையில் ஏற்படும் பாதிப்பு அதிகரிக்கும் என்று அமெரிக்க வணிகச் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க மற்றும் சீன அரசுகள், வர்த்தகப் பிரச்சினை குறித்து கண்ணியமான முறையில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் இச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

6 நாட்கள் நீடிக்கும் கேட்டறிதல் கூட்டத்தில், 350க்கும் மேலான அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மற்றம் தொழில் துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்