சீன-சல்வடோர் தூதரக உறவு:இன்று தொடக்கம்

மதியழகன் 2018-08-21 14:39:51
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-சல்வடோர் தூதரக உறவு:இன்று தொடக்கம்

சீன மக்கள் குடியரசுக்கும் எல் சல்வடோர் குடியரசுக்கும் இடையேயான தூதரக உறவை ஆரம்பிப்பது குறித்த கூட்டறிக்கை 21ஆம் நாள் செவ்வாய்கிழமை பெய்ஜிங்கில் கையெழுத்தானது. சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயும்,  சல்வடோர் வெளியுறவு அமைச்சர் கார்லோஸ் கஸ்டனேடாவும் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர், இருவரும் அறிக்கையில் கையெழுத்திட்டனர்.

சீன-சல்வடோர் தூதரக உறவு:இன்று தொடக்கம்

இந்த அறிக்கை கையெழுத்தானதன் தேதி முதல், ஒன்றுக்கு ஒன்று தூதரக உறவை ஏற்றுக்கொண்டு இந்த உறவை தொடக்குமென இரு நாடுகள் அறிவித்துள்ளன.

சல்வடோர் குடியரசுத் தலைவர் சல்வடோர் சஞ்செஸ் செரென் 20ஆம் நாளிரவு தேசிய தொலைக்காட்சி மூலம் உரைநிகழ்த்துகையில்:

சீனாவுடன் தூதரக உறவை உருவாக்குவது, சரியான தொடக்கம் ஆகும். இது, சர்வதேசச் சட்டம் மற்றும் சர்வதேச உறவு உள்ளிட்ட கோட்பாடுகளுக்கும், தற்போதைய கால ஓட்டத்திற்கும் பொருந்தியதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்