கூடுதல் வலி வசூலிப்புக்கு அமெரிக்க நிறுவனங்கள் எதிர்ப்பு

தேன்மொழி 2018-08-22 11:16:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

20ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சீன வணிகப் பொருட்கள் மீது அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம், 6 நாட்கள் நீடிக்கும் வெளிப்படையான கேட்டறிதல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. கூடுதல் சுங்க வரியைத் தவிர்க்கும் அணுகுமுறையை நாட வேண்டும் என்று அமெரிக்க தொழில் நிறுவனங்கள் இக்கூட்டத்தில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

வாஷிங்டன் போஸ்ட் 21-ஆம் நாள் வெளியிட்ட கட்டுரையில், இக்கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 1300க்கும் மேலான கருத்துகளில், பெரும் பகுதி கூடுதல் வரி வசூலிப்புக்கு எதிரானவை என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய வணிக மற்றும் பொருளாதார சங்கம் வெளியிட்ட புள்ளிவிபரங்களின் படி, கருத்துக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டோரில் 91விழுக்காட்டவர், தற்போதைய மற்றும் எதிர்கால சுங்க வரிக் கொள்கை, அமெரிக்க பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்று கருதுவதாக ப்ளூம்பெர்க் செய்தி ஊடகம் கூறியது.

மேலும் அதிகமான சீன வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிக்க கூடாது என சில அமெரிக்க நிறுவனங்கள் வெள்ளை மாளிகைக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக நியூயார்க் டைம்ஸ் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையில், 21ஆம் நாள் நடைபெற்ற கேட்டறிதல் கூட்டத்தில், லாகிடெக், டெல் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூறுகையில், சீனாவின் வணிகப் பொருட்கள் மீது கூடுதல் வரி வசூலிப்பது, அமெரிக்காவின் தயாரிப்புத் துறை, வேலை வாய்ப்பு, தொழில் நுட்பத் துறையில் அதன் அந்தஸ்து ஆகியவற்றுக்கு வேறுபட்ட அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்தனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்