டிரம்பின் முன்னாள் தேர்தல் அணிப் பொறுப்பாளரின் குற்றங்கள்

இலக்கியா 2018-08-22 14:50:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்ட் டிரம்பின் முன்னாள் தேர்தல் அணிப் பொறுப்பாளர் பால் மனஃபோர்ட், வரிவிதிப்பில் மோசடி, வங்கி நாணய மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் குற்றவாளி என்று அமெரிக்க விர்ஜீனிய மாநிலக் கூட்டாட்சி நீதிமன்றத்தின் நடுவர் குழு தீர்ப்பு அளித்தது.

மனஃபோர்ட் மீதான குற்றச்சாட்டுகள், சிறப்பு வழக்கறிஞர் ராபர்ட் முல்லர் தலைமையிலான குழுவினர், அமெரிக்க அரசுத் தலைவர் தேர்தலில் ரஷியா ஈடுபட்டது என்ற குற்றச்சாட்டு வழக்கைப் புலனாய்வு செய்த போது கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து டிரம்ப் அன்று கூறுகையில், மனஃபோர்ட் செய்த குற்றங்கள், ரஷிய வழக்குடன் தொடர்பு ஒன்றும் இல்லை. என்னுடனும் தொடர்பு இல்லை என்றார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்