அமெரிக்கா, பாகிஸ்தான் யார் மனக்குழப்பம்?

இலக்கியா 2018-08-24 10:00:49
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 23ஆம் நாள் தொலைப்பேசி மூலம் பாகிஸ்தான் தலைமையமைச்சர் இம்ரான் கானுடன் தொடர்பு கொண்ட போது, பயங்கரவாத எதிர்ப்பு அளவை அதிகரிக்குமாறு பாகிஸ்தானுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், பாகிஸ்தானின் புது அரசுடன் ஒத்துழைப்பை மேற்கொண்டு, பயன் மிக்க இருத்தரப்பு உறவை உருவாக்க அமெரிக்கா விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

அதே நாள் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் முகமத் ஃபைசால், இணையச் செய்தி ஊடகத்தில் இவ்வறிக்கையை மறுத்தார். அவர் கூறுகையில் பாம்பியோவும் இம்ரானும், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதப் பிரச்சினையைக் குறிப்பிடவில்லை என்றார். அதோடு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இவ்வறிக்கையை உடனடியாகத் திருத்த வேண்டும் என்றும் ஃபைசால் கோரிக்கை தெரிவித்தார்.

தனது அறிக்கை அமசங்களில் ஊன்றி நிற்பதாக அமெரிக்கா அன்று பதிலளித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்