ஐரோப்பிய ஒன்றியம்:ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையைப் பேணிக்காக்க வேண்டும்

தேன்மொழி 2018-09-01 15:08:42
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டம் ஆகஸ்ட் 31-ஆம் நாள் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் நிறைவடைந்தது. சிரியா நிலைமை, ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை, அட்லாண்டிக் பெருங்கடல் கடந்த உறவு உள்ளிட்ட பிரச்சினைகள், இகூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதாண்மை மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்குப் பொறுப்பேற்றுள்ள உயர் நிலை பிரதிநிதி ஃபெடரிகா மொக்ஹெரினி இக்கூட்டத்துக்குப் பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், ஐ.நாவின் கட்டுக்கோப்புக்குள், சிரியாவின் அரசியல் போக்கு உறுதியாக மேற்கொள்ளப்பட்டால் தான், ஐரோப்பிய ஒன்றியம் சிரியாவின் மறுசீரமைப்புக்கு நிதி வழங்கும் என்றார்.

தவிர, அமெரிக்கா ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையிலிருந்து விலகி, ஈரான் மீது தடை நடவடிக்கையைத் துவங்கிய போதிலும், ஐரோப்பிய ஒன்றியம், தொடர்புடைய பல்வேறு தரப்புகளுடன் ஒத்துழைத்து, ஈரானின் நலனுக்கு உத்தரவாதம்  அளித்ததுடன் தொடர்ந்து இவ்வுடன்படிக்கையைப் பேணிக்காத்து வருகின்றது என்று மொக்ஹெரினி தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்