சீனாவுடன் பல தரப்புவாத புனரமைப்புப் பணி: பிரான்ஸ்

இலக்கியா 2018-09-02 15:40:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுடன் இணைந்து பல தரப்புவாதத்தை மறுசீரமைக்க, பிரான்ஸ் விரும்புவதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் லேட்ரீயன் ஆக்ஸ்ட் 31ஆம் நாள் தெரிவித்தார். அவர் அன்று பிரான்ஸின் ஃபொய்தியர் நகரில் நடைபெற்ற சீனாவும் ஆசியாவும் என்ற கருத்தரங்கில் கூறுகையில், அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இராண்டாவது உலகப் போருக்குப் பின் நிறுவப்பட்ட சர்வதேச முறைமையைச் சீர்கெடுத்து வருவதாகவும், பல தரப்புவாதம், நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவித்தார்.

சீனாவும் ஆசியாவும் என்னும் தலைப்பிலான இக்கருத்தரங்கில், பிரான்ஸ், சீனா, ரஷியா, ஆஸ்திரேலியா, இந்தியா, துனீசியா முதலிய நாடுகளைச் சேர்ந்த அரசியல், பொருளாதாரம் மற்றும் கல்வி துறைகளின் நிபுணர்களும், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்