ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது பற்றி மீண்டும் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பில்லை:தெரசா மே

வாணி ​ 2018-09-02 16:13:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது பற்றி மீண்டும் பொது மக்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்று அந்நாட்டின் தலைமை அமைச்சர் தெரசா மே தெரிவித்துள்ளார். பிரிட்டனின் டெய்லி தந்தி இணையத்தளத்தில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட கட்டுரையில், பொது மக்கள் வாக்கெடுப்பு மீண்டும் நடத்துவது பிரிட்டனின் ஜனநாயகத்தைக் கடுமையாக அத்துமீறும் செயலாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

தனது அரசு அனைவருக்கும் சேவை புரியும் பொருளாதாரத்தை வளர்த்து, பிரிட்டன் நாட்டின் ஒன்றிணைப்பைப் பேணிக்காக்க முயற்சிகளை மேற்கொள்ளும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்