18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு – பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்

நாதன் 2018-09-03 16:09:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இந்தோனேசியாவில் நடைபெற்று வந்த 18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை வெகுசிறப்பான நிறைவு நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. ஆசிய விளையாட்டு ஆற்றல் என்று போற்றப்படும் சீனா, பதக்கப்பட்டியலில் 132 தங்கம், 92 வெள்ளி, 65 வெண்கலம் என மொத்தம் 289 பதக்கங்களை வென்று முதல் இடத்தைப் பிடித்தது.

இப்போட்டிக்கு சீனா அனுப்பியிருந்த 845 வீரர்களில் இளம் வீரர்களே அதிகம். இவர்களில் 631 பேர் ஒலிம்பிக் போட்டியிலோ, ஆசிய விளையாட்டிலோ பங்கேற்ற அனுபவம் இல்லாதவர்கள்.  போட்டியில் பங்கேற்ற சீனக் குழுவின் பொதுச்செயலர் லியு குவோயொங் கூறுகையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தயாராகுவதற்கு, ஆசிய விளையாட்டு ஒரு நடுத்தேர்வு போல உதவுகிறது என்று தெரிவித்தார்.

205 பதக்கங்களுடன் ஜப்பான் 2ஆம் இடத்தையும், 177 பதக்கங்களுடன் தென் கொரியா 3ஆம் இடத்தையும் பிடித்தன. இந்தியா, 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8ஆவது இடத்தைப் பிடித்தது.

நிறைவுவிழாவின்போது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் கொடியின் ஒப்படைப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அடுத்த ஆசிய விளையாட்டு போட்டி 2022இல் சீனாவின்  ஹங்ஜோவில் நடைபெறுவதால், அந்நகரின் மேயர் ஸு லியி கொடியைப் பெற்றுக் கொண்டார்.

இதற்கு முன்பு,  சீனாவின் பெய்ஜிங்கில் 1990லும், குவங்ஜோவில் 2010லும் இப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்