சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு

மதியழகன் 2018-09-05 08:57:16
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ஆப்பிரிக்க தலைவர்கள் செய்தியாளர்களுடன் சந்திப்பு

சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் 2018ஆம் ஆண்டு பெய்ஜிங் உச்சி மாநாடு செவ்வாய்கிழமை நிறைவு பெற்ற பிறகு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், இந்த மன்றத்தின் கடந்த தலைமைப் பதவி வகித்த தென்னாப்பிரிக்க அரசுத் தலைவர்  ராமாஃபோசா, நடப்புத் தலைமைப் பதவி வகிக்கும் செனகல் அரசுத் தலைவர் மேக்கி சால் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது ஷிச்சின்பிங் பேசுகையில்

ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறும் அடிப்படையில்,  சீனா-ஆப்பிரிக்கா இடையேயான பொது சமூகத்தை உருவாக்க இரு தரப்புகளின் தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். வெற்றி பெற்றுள்ள பெய்ஜிங் உச்சி மாநாடு, சீன-ஆப்பிரிக்க உறவின் புதிய அத்தியாயத்தை திறந்து வைத்து, வளரும் நாடுகளிடையேயான ஒத்துழைப்பின் புதிய மாதிரியை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.

ராமாஃபோசாவும், சாலும் தங்களது உரையில் கூறுகையில்

நடப்பு உச்சி மாநாட்டில் அதிக சாதனைகளை படைத்துள்ளது. சீன-ஆப்பிரிக்க நட்புறவை சகோதர ரீதியில் இது வெளிகாட்டியதோடு, ஆப்பிரிக்க-சீன வளர்ச்சியின் புதிய எதிர்காலத்தை நிர்ணயம் செய்துள்ளது. சீனாவுடன் இணைந்து, ஆப்பிரிக்க-சீன ஒத்துழைப்புக்கான புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி, மேலும் நெருக்கமான பொது சமூகத்தை உருவாக்கி, ஆப்பிரிக்க மற்றும் சீன மக்களுக்கு நன்மை செய்ய ஆப்பிரிக்கா விரும்புகிறது என்று தெரிவித்தனர். 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்