பாலஸ்தீனம் அமெரிக்காவுக்கு கண்டனம்

இலக்கியா 2018-09-11 09:24:21
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வாஷிங்டனிலுள்ள பாலஸ்தீன விடுதலை அமைப்பின் அலுவலகத்தை மூடும் அமெரிக்காவின் முடிவுக்கு, பாலஸ்தீனத்தின் பல்வேறு தரப்புகள் 10ஆம் நாள் கண்டனம் தெரிவித்தன. இஸ்ரேலின் குற்றச் செயல்களைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா இம்முடிவை எடுத்துள்ளது என்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேலின் குற்றம் மீது புலனாய்வு மேற்கொள்ளுமாறு, பாலஸ்தீனம் வற்புறுத்தும் என்றும் அவை தெரிவித்துள்ளன.

பாலஸ்தீன விடுதலை அமைப்பு, சர்வதேசச் சமூகத்தால் ஏற்றுக்கொண்ட பாலஸ்தீன மக்களின் ஒரே ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாகும். அமெரிக்கா, பாலஸ்தீனம் என்ற நாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் பாலஸ்தீன விடுதலை அமைப்பு, 1994ஆம் ஆண்டு வாஷிங்டனில் அலுவலகத்தைத் திறக்க, அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்