கிழக்கு நோக்கி சென்று பயன் பெறுகிறது:ரஷியா

மதியழகன் 2018-09-11 16:49:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

4ஆவது கீழைப் பொருளாதார மன்றக் கூட்டம் செப்டம்பர் 11 முதல் 13 வரை ரஷியாவின் வ்ளதிவோஸ்டோக் நகரில் நடைபெறுகிறது.

இந்த மன்றம், ரஷிய அரசுத் தலைவர் விளதிமிர் புதினால் 2015ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டு தொடங்கப்பட்டது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான உறவுகளில் மோசமான நிலை ஏற்பட்ட பின்னணியில், கிழக்கு நோக்கி செல்லும் கொள்கையைச் செயல்படுத்தும் நோக்கில் இந்த மன்றத்தின் உருவாக்கபட்டு செயல்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளில், கிழக்கு நோக்கி செல்லும் வேகத்தை ரஷியா விரைவுப்படுத்தியதுடன், ரஷியா பயன்களைப் பெற்று வருகிறது.

முதலில், கிழக்கு நோக்கி செல்லும் திட்டத்தில்,  ரஷியாவும் சீனாவும் ஒத்துழைப்புடன் கொண்டு வந்துள்ள பெரும் நலன்களை ரஷியா நேரடியாக கண்டுள்ளது. தற்போது, தூர கிழக்குப் பகுதியில் ரஷியாவின் முதல் பெரிய வர்த்தக கூட்டாளியாகவும், முதல் வெளிநாட்டு முதலீட்டு நாடாகவும் சீனா திகழ்கிறது. ரஷிய-சீன ஒத்துழைப்பை அதிகரிப்பது, கிழக்கை நோக்கிச் செல்வதில் மிக முக்கிய பகுதியாகும்.

இரண்டாவதாக, கிழக்கு நோக்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் வடக்கிழக்காசியாவில் ஒத்துழைப்பை விரிவாக்கும் வாய்ப்புகளை ரஷியா கண்டறிந்துள்ளது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ஜப்பான் தலைமை அமைச்சர் சின்சோ அபே, தென்கொரிய தலைமை அமைச்சர் லீ நாக்யுன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கீழைப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்பது, பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும். இது, தூத கிழக்குப் பகுதியின் வளர்ச்சியைத் தூண்ட விரும்பும் ரஷியாவுக்கு பெரிய நன்மையை கொண்டு வரும்.

கடைசியாக, ஆசிய-பசிபிக் பிராந்திப் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது. அது, உலகப் பொருளாதார வரைப்படத்தில் மிக சுறுசுறுப்பான பகுதிகளில் ஒன்றாகும். ஆசிய-பசிபிக் பொருளாதார மண்டலம், ரஷியாவுக்கு பெரும் நுகர்வுச் சந்தையாகவும் முதலீடு அளிக்கும் இடமாகவும் இருக்கிறது. எனவே, கிழக்கு நோக்கி செல்லும் போக்கில், ரஷியா, வளர்ச்சி வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும்.

கிழக்கு நோக்கி செல்லும் கொள்கை, மேலை நாடுகள் ரஷியாவுக்கு தடை விதித்ததால் ஏற்பட்டுள்ள விளைவு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மேலை நாடுகளுடனான உறவில் மோசமான நிலை, ரஷியாவின் செயல்பாட்டை விரைவுப்படுத்துவது என்பது உண்மை. அதேசமயத்தில், ஐரோப்பா, தொடர்ந்து ரஷியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாகும். இதனால், மேலை மற்றும் கிழக்கு என இரண்டு திசைகளிலும் ரஷியா நிற்கிறது. வளர்ச்சிப் போக்கினைப் பார்த்தால், கிழக்கு நோக்கி செல்லும் போது, மேலும் பரந்த மற்றும் அருமையான காட்சிகளை ரஷியா கண்டுகளிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்