சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது அமெரிக்காவின் அச்சுறுத்தல்

இலக்கியா 2018-09-12 09:50:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போர் குற்றம் புரிந்தது தொடர்பான குற்றச்சாட்டு மீது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் புலனாய்வைத் தொடங்கினால், இந்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகளுக்கும் வழக்கறிஞர்களுக்கும் எதிராகத் தடை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று அந்நாட்டுத் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் போல்டன் 10ஆம் நாள் தெரிவித்தார்.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், 2016ஆம் ஆண்டின் நவம்பர் திங்கள் வெளியிட்ட அறிக்கையில், தலிபான் இயக்கம், ஆப்கானிஸ்தான் அரசுப் படை ஆகியவை போர் குற்றங்களில் ஈடுபட்டதைத் தவிர, அமெரிக்கப் படை மற்றும் மத்திய உளவு நிறுவனம், கொடிய தண்டனை விதித்தல், துன்புறுத்தல் முதலிய போர் குற்றங்களையும் புரிந்தன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்