சீன-ரஷிய உள்ளூர் பிரதேச ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை

தேன்மொழி 2018-09-12 10:18:37
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-ரஷிய உள்ளூர் பிரதேச ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை

சீன-ரஷிய உள்ளூர் பிரதேச ஒத்துழைப்புப் பேச்சுவார்த்தை

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதினும், 11-ஆம் நாள் செவ்வாய்கிழமை வளதிவோஸ்டோக் நகரில் நடைபெற்ற சீனா மற்றும் ரஷியாவின் உள்ளூர் பிரதேசத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.

உள்ளூர் பிரதேசங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டுறவின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றி வருகின்றது. இத்தகைய ஒத்துழைப்பு மேலும் நெருக்கமாக வளர்ந்தால், இரு நாடுகளுக்கிடையே ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு மேற்கொள்ளும் அடிப்படையும் மேலும் நெருக்கமாகும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளின் உள்ளூர் பிரதேசங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்புக்கு, அவர் நான்கு ஆலோசனைகளை வழங்கினார்.

உள்ளூர் பிரதேசங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு, ரஷியா மற்றும் சீனாவின் பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவுக்கு முக்கியப் பகுதியாக திகழ்கின்றது. இரு நாட்டு மாநிலங்களுக்கிடையே பொருளாதாரம், வர்த்தகம், மானிடவியல் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பு நெருக்கமாக மேற்கொள்ளப்படுவதற்கு மகிழ்ச்சி அடைவதாக புதின் கூறினார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்