ஷிச்சின்பிங்-மங்கோலிய அரசுத் தலைவர் சந்திப்பு

இலக்கியா 2018-09-12 14:27:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 12ஆம் நாள் ரஷியாவின் வ்லாதிவொஸ்டோக்கில் மங்கோலிய அரசுத் தலைவர் பட்துல்காவுடன் சந்திப்பு நடத்தினார். மங்கோலியாவுடன் ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் வலுப்படுத்தி, சீன-மங்கோலிய பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் வளர்க்க சீனா விரும்புகிறது என்று ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

பட்துல்கா கூறுகையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, மங்கோலிய-சீன-ரஷிய பொருளாதார வழித்திட்டக் கட்டுமானத்தை முன்னேற்ற மங்கோலியா விரும்புவதாகத் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்