சீன ஊடகக் குழுமத் தலைமை இயக்குநரின் சிறப்புரை

வான்மதி 2018-09-12 16:41:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமத் தலைமை இயக்குநரின் சிறப்புரை

4ஆவது கீழை பொருளாதார மன்றக் கூட்டத்தில் நடத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார மாற்றத்தில் ஆசிய செய்தி காட்சி எனும் கருத்தரங்கில் சீன ஊடக குழுமத்தின் தலைமை இயக்குநர் ஷென் ஹாய்சியோங் 12ஆம் நாள் பங்கேற்றார். இதில் அவர் சிறப்புரை நிகழ்த்துகையில், புதிய யுகத்தில் ஆசிய ஊடகங்கள் நெடுநோக்கு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, ஆசியாவுக்குரிய குரலை கூட்டாக எழுப்ப வேண்டும் என்று முன்மொழிந்தார்.

சீன ஊடகக் குழுமத் தலைமை இயக்குநரின் சிறப்புரை

மேலும், உலக கட்டமைப்பின் மாற்றத்துக்கிணங்க, புதிய யுக ஐரோப்பிய-ஆசிய ஊடகங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில், மூன்று துறைகளில் ஆசிய ஊடக ஒத்துழைப்பை முன்னேற்ற முடியும். முதலாவதாக, ஒத்துழைப்பு விதிகளை வகுத்து, ஊடகங்களின் நெடுநோக்கு ஒத்துழைப்பு நிலையை உயர்த்த வேண்டும். இரண்டாவதாக, புத்தாக்கத்தில் ஊன்றிநின்று புதிய ஊடக ஒத்துழைப்பை ஆழமாக்க வேண்டும். மூன்றாவதாக, ஒத்துழைப்புடன் தொடர்பை முன்னேற்றி, ஒருங்கிணைந்த ஆற்றலை உருவாக்க வேண்டும். இதனால் ஒத்துழைப்பு நிலையும், வேறுபட்ட நாகரிகங்களுக்கிடையில் தொடர்பின் விளைவும் பயனுள்ள முறையில் உயர்த்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்