வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஷிச்சின்பிங் வேண்டுகோள்

மதியழகன் 2018-09-12 18:53:32
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஷிச்சின்பிங் வேண்டுகோள்

4ஆவது கீழைப் பொருளாதார மன்றத்தின் முழு அமர்வுக் கூட்டம் புதன்கிழமை ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியிலுள்ள வ்ளதிவோஸ்டோக் நகரில் நடைபெற்றது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின், மங்கோலிய அரசுத் தலைவர்  கால்ட்மா பட்டுல்கா, ஜப்பான் தலைமை அமைச்சர் ஷின்சோ அபே, தென்கொரிய தலைமை அமைச்சர் லீ நாக்-யோன் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

வடகிழக்கு ஆசியாவில் அமைதி மற்றும் செழிப்புக்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த ஷிச்சின்பிங் வேண்டுகோள்

அப்போது ஷிச்சின்பிங் உரைநிகழ்த்துகையில்,

புதிய சூழ்நிலையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பிராந்தியத்தின் அமைதி, நிலைப்புத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை கூட்டாக மேம்படுத்த பல்வேறு தரப்புகளும் பாடுபட வேண்டும். இதற்காக, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துதல், ஒத்துழைப்பை ஆழமாக்குதல், மக்களிடையே பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்துதல், விரிவான மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சியை நனவாக்குதல் ஆகிய 4 அம்சங்கள் அடங்கிய முன்மொழிவை ஷிச்சின்பிங் அளித்தார்.

வரலாற்று வாய்ப்புகளைப் பயன்படுத்தி, கால ஓட்டத்திற்கு ஏற்ப செயல்பட்டு, வடகிழக்கு ஆசிய நாடுகள், ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியிலும் வடகிழக்கு ஆசியாவிலும் உள்ள பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று ஷிச்சின்பிங் வேண்டுகோள் விடுத்தார்.

பொது நலன்களை விரிவாக்கி, இப்பிராந்தியத்திலுள்ள பொது மக்களுக்கு ஒத்துழைப்பு வாய்ப்புகளையும் வளர்ச்சி சாதனைகளையும் கொண்டு வந்து, தூரக் கிழக்குப் பகுதி மற்றும் வடகிழக்கு ஆசியாவின் அருமையான எதிர்காலத்தை கூட்டாக  உருவாக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்