காசநோய் தடுப்பு பற்றிய ஐ.நா பொதுப் பேரவையின் கூட்டத்தில் பெங்லியுவானின் உரை

ஜெயா 2018-09-27 09:57:58
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

காசநோய் தடுப்பு பற்றிய ஐ.நா பொதுப் பேரவையின் கூட்டத்தில் பெங்லியுவானின் உரை

செப்டம்பர் 26ஆம் நாள், 73ஆவது ஐ.நா பொது பேரவையின் காசநோய் தடுப்பு பற்றிய உயர்நிலை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் துணைவியாரும், உலக சுகாதார அமைப்பின் காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு நல்லெண்ண தூதருமான பெங்லியுவான் காசநோய் தடுப்புப் பணியின் சிறப்புப் பிரதிநிதியாக, இக்கூட்டத்தின் துவக்கவிழாவில் காணொலி வழி உரை வழங்கினார்.

அவர் கூறுகையில், பல்வேறு நாடுகளின் அரசுகள், சர்வதேச அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள், நிபுணர்கள், தொண்டர்கள் ஆகியோரின் கூட்டு முயற்சியுடன், உலக காசநோய் தடுப்புப் பணி, முக்கிய சாதனைகளைப் பெற்றுள்ளது. ஆனால், காசநோய் தடுப்பில் மனிதகுலம் இன்னும் கடும் அறைகூவல்களை எதிர்நோக்கியுள்ளது. பல்வேறு நாடுகள், கையோடு கை கோர்த்து, காசநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மாற்ற உதவ வேண்டும். காசநோயைத் தடுக்க முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்