அமெரிக்காவின் கவலை!

மதியழகன் 2018-10-05 19:44:03
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் துணைத் தலைவர் மைக் பென்ஸ் 4ஆம் நாளன்று வாஷிங்டனிலுள்ள சிந்தனை கிடங்கு ஒன்றில் சொற்பொழிவு ஆற்றியபோது, சீனாவின்  உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டினைச் சுமத்தியதோடு, சீனா, அமெரிக்காவின் உள்விவகார மற்றும் தேர்தலில் தலையிட்டதாகவும் பொய்யாகக் குற்றம் சாட்டினார்.

இதற்கு முன்பு,  முற்றிலும் சீனாவுக்கான புதிய கொள்கையை வெள்ளை மாளிகை விளக்கிக் கூறுவதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால், பென்ஸின் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சீனா தொடர்பான அம்சங்கள், அமெரிக்காவினால் பலமுறை பேசப்பட்டுள்ளன. புதிய அம்சங்கள் ஏதுமில்லை. ஆனால், வெள்ளை மாளிகை ஏன் இப்போது சீனாவை மீண்டும் பழித்துக் கூறுகிறது என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ 8ஆம் நாள் சீனாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது, சீன-அமெரிக்க உறவு உள்ளிட்டவை பற்றி இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும். அமெரிக்கா உயர் அதிகாரிகளை அனுப்பும் அதேவேளையில், சீனாவின் மீது பன்முகங்களிலும் குற்றஞ்சாட்டியள்ளது. அமெரிக்காவின் இந்த செயல்பாட்டு வழிமுறை நாம் ஏற்கனவே அறிந்து வைத்துள்ளோம். சீன-அமெரிக்க வர்த்தகச் சிக்கலிலும், அமெரிக்கா அவ்வாறே நடந்து வருகிறது.

பென்ஸின் உரையில், சீனாவின் மீது பன்முகக் குற்றச்சாட்டினை சுமத்துவது, அமெரிக்காவின் அரசியல் மற்றும் தேர்தல் நலன்களைக் கருத்தில் கொள்வதாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் கவலையையும் அவசிய தன்மையையும் அமெரிக்காவின் இச்செயல் காட்டுகிறது.

உண்மையில், பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு, சீனாவுக்கும் விருப்பமோ,  நேரமோ இல்லை. முதலில்,  ஒன்றுக்கொன்று உள்விவகாரங்களில் தலையிடாமை என்ற கோட்பாட்டை சீனா எப்போதுமோ பின்பற்றி வருகிறது. மறுபுறம், சீனாவில் இன்னும் 3 கோடி மக்கள் வறிய நிலையில் இருந்து விடுபடவில்லை. சீனாவில் இன்னும் பல வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. சொந்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் சீனாவுக்கு அதில் செயல்படுவதற்கே நேரமில்லாமல் உள்ளது. இது பற்றி அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர்  கிரிஸ்ட்ஜென் நீல்சே வெளிப்படையாக பேசுகையில்,  2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் இடைக்கால தேர்தலின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தவே அல்லது மாற்றவே சீனா முயற்சிப்பதற்கு சான்று எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

சீனா மீதான அமெரிக்காவின் கொள்கை எவ்வாறு மாறினாலும், அமெரிக்கா மீதான சீனாவின் கொள்கை தொடர்ச்சியாகவும் தெளிவாகவும் இருக்கும். மோதல் மற்றும் எதிரெதிர் நிலை இல்லாமல், ஒன்றுக்கொன்று மதிப்பளித்து, ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவதே சீனக் கொள்கையின் சாராம்சமாகும். டிரம்புக்கு ஹென்றி கிசிங்கர் முன்மொழிவு அளிக்கையில், சீன வரலாறு மற்றும் பண்பாடு பற்றி அறிந்து கொண்டவர்களை அமெரிக்க-சீன அரசுகளுக்கிடையேயான தொடர்பு கொள்பவராக தனது குழுவில் சேர்க்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் பென்ஸின் கூற்றைப் பார்த்தால், தற்போதுள்ள அமெரிக்க அரசில் இத்தகைய நபர் இல்லை என்று தெரிகிறது. அமெரிக்க அரசு முன்னாள் தலைவர்களின் ஆலோசனையைக் கேட்டறிய வேண்டும். ஏனென்றால், உலகில் மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா, புரிந்துணர்வு, கேட்டறிதல், மற்ற நாடுகளுக்கு மதிப்பளித்தல் ஆகியவற்றின்படி செயல்பட்டால், உண்மையான பெருமையைப் பெற முடியும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்