நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி

பூங்கோதை 2018-10-10 10:10:48
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி

சீன அரசு வழங்கிய மனித நேய உதவி பொருட்கள் நிறைந்த முதலாவது சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி அக்டோபர் 9ஆம் நாள் இந்தோனேசியாவின் பலிக்பப்பன் விமான நிலையத்தைச் சென்றடைந்தது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியாவுக்கு சீன அரசு உதவி

செப்டம்பர் 28ஆம் நாள், இந்தோனேசியாவின் மத்திய சுலவேசி மாநிலத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அலகாகப் பதிவான கடும் நிலநடுக்கம், கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 9ஆம் நாள் வரை, இதில் 2010 பேர் உயிரிழந்தனர். மீட்புப் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தோனேசியாவின் தேவைக்கிணங்க, கூடாரங்கள், நீரை தூய்மைப்படுத்தும் கருவிகள், மின்னாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை, சீனா வழங்கியுள்ளது. மேலும், அன்றாட வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருட்களை, இந்தோனேசியாவுக்கான சீனத் தூதரகம், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்துக்கு அனுப்பியுள்ளது. 

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்