ஷிச்சின்பிங்-டிரம்ப் தொலைப்பேசி தொடர்பு

வான்மதி 2018-11-02 09:18:40
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 1ஆம் தேதி அழைப்பின் பேரில் அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்புடன் தொலைப்பேசியில் பேசினார்.

டிரம்ப் கூறுகையில், இருநாட்டு அரசுத் தலைவர்களிடையேயான நேரடி தொடர்பு மிக முக்கியமானது. நாங்கள் நெருங்கிய தொடர்பை நிலைநிறுத்த வேண்டும். அர்ஜென்டினாவில் நடைபெறும் ஜி20 அமைப்பின் உச்சிமாநாட்டில் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்குடன் மீண்டும் சந்திப்பு நடத்துவதை எதிர்பார்கின்றேன். மேலும், சீனாவுடனான வர்த்தக ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து வரும் அமெரிக்கா, சீனாவுக்கான ஏற்றுமதியை தொடர்ந்து விரிவாக்க விரும்புகிறது. இத்துறையில் இருநாட்டு பொருளாதாரக் குழுக்கள் தொடர்பு மற்றும் கலந்தாய்வை வலுப்படுத்துவது அவசியம். முதலாவது சீன சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் அமெரிக்கத் தொழில் நிறுவனங்கள் கலந்து கொள்வதற்கு ஆதரவளிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

ஷிச்சின்பிங் பேசிய போது, இருநாட்டுறவு பற்றி சீனா பலமுறை கொள்கை மற்றும் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இருதரப்பும் உருவாக்கப்பட்ட முக்கிய உடன்பாடுகளுக்கிணங்க இருநாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என விரும்புகின்றேன். சீன-அமெரிக்க உறவின் வளர்ச்சி மீதும், வர்த்தக ஒத்துழைப்பின் விரிவாக்கத்தின் மீதும் ஆர்வம் கொண்ட நாங்கள் முயற்சியுடன் இந்த ஆர்வத்தை உண்மையாக மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், கொரிய தீபகற்ப நிலைமை பற்றியும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்