வானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு

வான்மதி 2018-11-21 11:06:00
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

வானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு

சீன அரசுத் தலைவர் ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு பிலிப்பைன்ஸில் மீண்டும் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தினால், பல ஆண்டுகளின் ஏற்றத்தாழ்வைக் கடந்து, இருநாட்டுறவு இப்போது புதிய நிலையை எட்டியுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவர் டுடெர்ட் ஆகியோர் 20ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தி, இருநாட்டுறவின் எதிர்காலத்துக்கு திட்டம் தீட்டி, பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புறவை உருவாக்குவதென ஒருமனதாக முடிவெடுத்துள்ளதே, இதற்கான முக்கியக் காரணமாகும்.

2005ஆம் ஆண்டுக்குப் பின், பிற நாடுகளின் தலையீட்டால் ஏற்பட்ட தென் சீனக் கடல் சர்ச்சையின் காரணமாக, சீன-பிலிப்பைன்ஸ் உறவு பாதிப்படைந்திருந்தது. 2016ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவராகப் பதவியேற்ற டுடெர்ட் சுதந்திர தூதாண்மைக் கொள்கையை மேற்கொண்டு வருவதால், இருநாட்டுறவு இயல்பான நிலைக்குத் திரும்பியுள்ளது. அதற்குப் பிறகு, ஷிச்சின்பிங் டுடெர்டுடன் 6 முறை சந்திப்பு நடத்தினார். அவர்களின் தலைமையில் இருநாட்டுறவு புதிய அத்தியாயத்தைத் திறந்து வைத்துள்ளது.

வானவில்லை மீண்டும் கண்டுள்ள சீன-பிலிப்பைன்ஸ் உறவு

இதையடுத்து, பிலிப்பைன்ஸின் உள்கட்டமைப்பு கட்டுமானத்துக்குச் சீனா ஆதரவளித்து வருகிறது. மேலும், பொருளாதாரத் துறை ஒத்துழைப்பை இருதரப்பும் வலுப்படுத்துவதோடு, பாதுகாப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம் ஆகிய துறைகளிலான ஒத்துழைப்பையும் விரிவாக்கி வருகின்றன.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் நடப்பு பிலிப்பைன்ஸ் பயணம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இது இருநாட்டுறவில் முக்கிய மைல் கல்லாகும். இப்பயணம் இருநாட்டுறவைப் பெரிதும் மேம்படுத்தும் அதேவேளை, சீனா-ஆசியான் நாடுகளிடையே கடல் சார் ஒத்துழைப்பை முன்னேற்றுவதற்குரிய முன்மாதிரியையும் உருவாக்கியுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்