அமெரிக்கா, தென்கொரியா கூட்டு ராணுவப் பயிற்சியின் அளவு குறைப்பு

மதியழகன் 2018-11-22 15:51:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அடுத்த ஆண்டின் வசந்தக் காலத்தில் நடைபெறும் ஃபோல் ஈகிள் எனப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின் அளவை அமெரிக்காவும் தென்கொரியாவும் குறைக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மட்டீஸ்21ஆம் நாள் தெரிவித்தார்.

 கொரிய தீபகற்பத்தின் அணு ஆயுதமின்மை நிலையை நனவாக்குவது தொடர்பான போக்கில் தூதாண்மை நடவடிக்கைகளைப் பாதிக்காவாறு, இவ்விரு நாடுகளும் இந்த முடிவை எடுத்துள்ளன.

அதே நாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பெயோ அமெரிக்க செய்தி ஊடகங்களிடம் பேசுகையில், அமெரிக்கா-வடகொரியா இடையே பேச்சுவார்த்தை நீண்டகாலத்திற்கு நீட்டிக்கும். இருப்பினும், இப்பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. வடகொரியா அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு அமெரிக்கா குறிப்பிட்ட காலக்கெடுவை விதிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்