பிரான்ஸில் எரிபொருள் வரி உயர்வு ஒத்திவைப்பு

இலக்கியா 2018-12-05 09:28:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரான்ஸில் எரிபொருள் வரி உயர்வு ஒத்திவைப்பு

எரிபொருள் வரியை உயர்த்தும் திட்டத்தை, 6 திங்களுக்கு ஒத்திவைப்பதாக ஃபிரான்ஸ் தலைமையமைச்சர் ஃபிலிப் 4ஆம் நாள் அறிவித்தார். இதனிடையில், இவ்வாண்டின் குளிர்காலத்தில் எரிவாயு மற்றும் மின்னாற்றல் விலையை அரசு உயர்த்தாது. இனிவரும் 6 திங்களில் வரி விதிப்பு, பொதுச் செலவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விரிவான விவாதங்களை ஃபிரான்ஸ் அரசு ஏற்படுத்தவுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக, ஃபிரான்ஸ் மக்கள் பலர், பாரீசில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். தீவிரவாதிகள் இந்த ஆர்ப்பாட்டத்தைப் பயன்படுத்தி, சில புகழ் பெற்ற காட்சித் தலங்களில் வன்முறை மோதல்களை ஏற்படுத்தினர்.

பிரான்ஸில் எரிபொருள் வரி உயர்வு ஒத்திவைப்பு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்