பல துருவ உலகிற்கு கூட்டு வெற்றியைக் கொண்டு வரும் சீனா

வான்மதி 2018-12-06 18:43:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் போர்ச்சுக்கலில் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்தார். கடந்த 9 நாட்களில் சுமார் 40 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் பயணித்து, ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய கண்டங்களைக் கடந்து சென்ற தனது பயணம் பற்றி குறிப்பிடுகையில், உலகின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மை, நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமை, தங்களது வாழ்வு நிலை மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றின் மீதான பல்வேறு நாட்டு மக்களின் நல்ல விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பை ஆழமான முறையில் உணர்ந்து கொண்டுள்ளேன் என்று ஷிச்சின்பிங் கூறினார். மேலும், தற்போதைய உலகம் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் அறைகூவல்களை எதிர்நோக்குகிறது. என்றாலும், ஒன்றுக்கொன்று மதிப்பு மற்றும் சமமான கலந்தாய்வு ஆகியவற்றை சீனா எப்போதுமே பின்பற்றி, அமைதியான வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய கூட்டு வெற்றியைக் கடைப்பிடித்து, பல்வேறு நாடுகளுடன் இணைந்து, மனிதகுலத்துக்கான பொது எதிர்காலச் சமூகத்தை உருவாக்க செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருதரப்பு மற்றும் பலதரப்பு நிகழ்ச்சிகள் பலவற்றில், உலகில் மிகப் பெரிய வளரும் நாடு ஒன்றின் அரசுத் தலைவரான ஷிச்சின்பிங், வளரும் நாடுகளின் நிலைப்பாட்டில் இருந்து உரைகளை நிகழ்த்தி, பரந்த அளவில் பலதரப்புவாதத்துக்கான ஒத்த கருத்தைத் திரட்டினார். திறப்பு, அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை, விதிமுறை ஆகிய மூன்று கோட்பாடுகளைச் சர்வதேச வர்த்தகம் உறுதியாக பின்பற்ற வேண்டும் என்றும், உலகப் பொருளாதார மேலாண்மையில் வளர்ச்சி பற்றிய பிரச்சினையை முக்கியமான இடத்தில் வைத்து, திறப்பு, ஒத்துழைப்பு, கூட்டுறவு, புத்தாக்கம், கூட்டு வெற்றி ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்றும், பெரிய நாடுகள் சீரான பரிமாற்றத்தை மேற்கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் முன்வைத்தார். அவரது இந்த உரைகள் சர்வதேசச் சமூகத்தில் பரந்தளவிலான மறுமொழி மற்றும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்