சீன-அமெரிக்க அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தை குறித்து ஆய்வாளர்களின் கருத்து

கலைமணி 2018-12-31 15:39:38
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

29ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், திட்டத்தின் படி, அமெரிக்க அரசுத் தலைவர் டோனல்ட் டிராம்புடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். ஒன்றுக்கு ஒன்று நலன் தந்து, இரு நாடுகள் மட்டுமல்லாது உலகிற்கும் துணை புரியும் உடன்படிக்கையை எட்ட வேண்டும் என்று இரு அரசுத் தலைவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

சீன-அமெரிக்க தூதாண்மையுறவு நிறுவப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவின் வரும் போது, இரு நாட்டு அரசுத் தலைவர்கள், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டது, ஒத்துழைப்பின் மூலம், கருத்து வேற்றுமையை குறைத்து, பேச்சுவார்த்தையின் மூலம் நிதானத்தை முன்னேற்றும் பொதுக் கருத்தை வெளிகாட்டியது என்று பெய்ஜிங்கிலுள்ள ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில், இரு நாட்டு அரசுத் தலைவர்கள் சரியான தொடர்பு மற்றும் இரு நாட்டு வர்த்தக பேச்சுவார்த்தையின் வெற்றிகரமான நடைமுறையாக்கம் ஆகியவற்றின் காரணமாக, கடந்த சில நாட்களாக சரிவிலிருந்த அமெரிக்க பங்கு சந்தை சீராகியுள்ளது என்று வால்ஸ்ட்ரீட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்