ஆப்பிரிக்காவின் கடன் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

பூங்கோதை 2019-01-04 12:55:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்பிரிக்காவின் கடன் பிரச்சினை பற்றிய சீனாவின் நிலைப்பாடு

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, எத்தியோபிய வெளியுறவு அமைச்சர் ஜெய்பேஹுவுடன் ஜனவரி 3ஆம் நாள் அடீஸ்அபாபாவில் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, அவருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ஆப்பிரிக்க நாடுகள், சீனாவுடன் ஒத்துழைப்பு மேற்கொண்ட பிறகு, கடன் பிரச்சினையைச் சந்தித்துள்ளன என்ற சிலரின் கருத்து குறித்து, வாங்யீ கூறுகையில், தெற்கு தெற்கு ஒத்துழைப்பின் மாதிரியாகவும், ஆப்பிரிக்காவுடனான சர்வதேச ஒத்துழைப்பின் மாதிரியாகவும் சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு திகழ்கிறது என கருதப்படுகிறது. ஆனால், அண்மையில், ஆப்பிரிக்காவின் கடன் பிரச்சினை வேண்டுமென்றே பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. கூடவே, சீனா இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று சிலர் தெரிவித்துள்ளனர். இது உண்மைகளுக்குப் பொருந்தியதாக இல்லை. அத்துடன், ஆப்பிரிக்க நாடுகள் இதை ஒப்புக்கொள்ளாது. பொதுவாக கூறினால், ஆப்பிரிக்காவின் கடன் பிரச்சினை, வரலாறு விட்டுச் சென்ற பிரச்சினையாகும். இது புதிதாக ஏற்பட்ட பிரச்சினை அல்ல. சீனா, இதற்கு காரணம் அல்ல என்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்