சீன வெளியுறவு அமைச்சர்-ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் சந்திப்பு

இலக்கியா 2019-01-05 15:50:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன வெளியுறவு அமைச்சர்-ஆப்பிரிக்க ஒன்றியத் தலைவர் சந்திப்பு

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, அடீஸ்அபாபாவிலுள்ள ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகத்தில், அதன் தலைவர் மோசா ஃபாகி மஹமத்துடன் 4ஆம் நாள் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங் யீ கூறுகையில், சீன-ஆப்பிரிக்க ஒத்துழைப்பு மன்றத்தின் பெய்ஜிங் உச்சிமாநாட்டில், இரு தரப்பும் எட்டியுள்ள கருத்துகளை நடைமுறைப்படுத்தத் தூண்ட வேண்டும். இதற்கிடையே, இரு தரப்பின் ஒத்துழைப்புக்கான ஒட்டுமொத்த திட்ட வரைவு, அமைதி மற்றும் பாதுகாப்பு, சுகாதார ஒத்துழைப்பு, சர்வதேச விவகாரங்களில் கூட்டுச் செயல்பாடு ஆகிய நான்கு துறைகளில், தொடர்பை அதிகரித்து, மேலும் வலுவான சீன-ஆப்பிரிக்க ஒன்றிய நெடுநோக்கு கூட்டாளியுறவை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்