பயங்கரவாதத்துக்கான நிதியளிப்பை ஒடுக்கும் ஐ.நா ஒப்பந்தத்தில் ஈரான் சேர்தல்

வாணி 2019-01-06 15:51:34
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பயங்கரவாதத்துக்கான நிதியளிப்பை ஒடுக்கும் ஐ.நா ஒப்பந்தத்தில் சேர்வது தொடர்பான கருத்துரு ஈரான் தேசிய நல மன்றத்தில் 5ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரான் இஸ்லாமிய குடியரசு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

இந்தக் கருத்துரு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு நடைமுறைக்கு வரும்.

கடந்த ஆண்டு அக்டோபர் திங்கள் ஈரான் நாடாளுமன்றம் இந்தக் கருத்துருவை ஏற்றுக்கொண்டிருந்தது ஆனால், இஸ்லாமிய சட்டம் மற்றும் அரசியில் அமைப்புச் சட்டத்தை மீறுகிறது என்ற காரணத்தினால் ஈரான் அரசியல் அமைப்புச் சட்டக் கண்காணிப்பு ஆணையம் நவம்பர் திங்களில் இதை நிராகரித்தது. பிறகு, நாட்டின் மீயுயர் நடுவண் நிறுவனமான ஈரான் தேசிய நல மன்றம் நடுவர் தீர்ப்பு ஒழுங்குமுறையைத் தொடங்கியது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்