பிரேசில் அணைக்கட்டு இடிந்து விழுந்ததில் 7 உயிரிழப்பு

இலக்கியா 2019-01-26 15:46:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரேசில் அணைக்கட்டு இடிந்து விழுந்ததில் 7 உயிரிழப்பு

பிரேசிலின் மினஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் சுரங்கக்கழிவுகள் அணைக்கட்டு ஒன்று 25ஆம் நாள் இடிந்து, விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர். 150 பேரைக் காணவில்லை என்று உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான அணைக்கட்டு, பிரேசில் வாலே என்ற தொழில் நிறுவனத்தைச் சேர்ந்த சுரங்கக்கழிவுகள் அணைக்கட்டாகும். விபத்தைத் தொடர்ந்து ஏராளமான சேறும், கழிவுகளும், ப்ரூமதினோ நகரிலுள்ள இந்நிறுவனத்தின் தலைமையகத்தையும், அருகிலுள்ள கிராமங்களையும் சூழ்ந்துள்ளன. அதனால் பாதிக்கப்பட்ட ஆற்றின் கரையோர வசிப்பவர்கள் வெளியேறுமாறு, உள்ளூர் அரசு அறிவுறுத்தியுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்