பிரதிநிதி அலுவலகம் நிறுவுவது பற்றி வெனிசுலா-அமெரிக்கப் பேச்சுவார்த்தை

வாணி 2019-01-27 16:19:19
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இரு நாட்டுறவு துண்டிக்கப்பட்டப் பிறகு, நாட்டின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அலுவலகத்தை எதிர் தரப்பில் அமைப்பது பற்றி அமெரிக்காவுடன் 30 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளதாக வெனிசுலா வெளியுறவு அமைச்சகம் 26ஆம் நாளிரவு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

வெனிசுலாவில் ஆட்சி கவிழ்ப்புக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவளிப்பதாக அந்நாட்டின் அரசுத் தலைவர் மாதுரொ 23ஆம் நாள் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து அமெரிக்காவுடனான தூதாண்மை உறவை அதிகாரப்பூர்வமாகத் துண்டிப்பதாகவும் அறிவித்தார். அதற்குப் பின், இரு நாடுகளின் ஒரு தொகுதி தூதரகப் பணியாளர்கள் 25ஆம் நாள் சொந்த நாட்டுக்குத் திரும்பி அழைக்கப்பட்டனர். ஆனால், தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தகப் பரிமாற்றம் இயல்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிகிறது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்