உள்கட்டமைப்பு நிதி ஒதுக்கீட்டில் தனியார் துறை பங்கு

பண்டரிநாதன் 2019-01-30 16:50:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்கட்டமைப்பு வசதிக்கு நிதி அளிப்பதில், தனியார் துறையினரின் முக்கியமான பங்கு அடுத்த சில ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில், சீனா, இந்தியா, ரஷியா உள்ளிட்ட 8 நாடுகளில் உள்கட்டமைப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டின் போக்கு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தகத்தை ஊக்குவிக்கும் எல்லை கடந்த கட்டமைப்பு வசதி, சந்தை ஒருங்கிணைப்பு, பசுமை ஆற்றல்களை பகிர்ந்தளித்தல் ஆகியவை, பொருளாதார வளர்ச்சி குறைந்து வரும் சமகாலத்தில், முக்கியமானவை என்றும் இதில் அழுத்தமாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சந்தையின் உறுதியற்ற தன்மை மற்றும் குறுகிய-கால அறைகூவல்கள் தற்போது நிலவுகின்ற போதிலும், உள்கட்டமைப்பு முதலீட்டுக்கான வாய்ப்புகள் ஆசியாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள வங்கிகள், உள்கட்டமைப்புத் துறைக்கு நிதியளிப்பதில் முக்கியமான பங்கினை ஆற்றி வருகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்