உலகின் பல இடங்களில் வசந்த விழா கொண்டாட்டங்கள்

வான்மதி 2019-02-04 16:56:31
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டின் வசந்த விழா விடுமுறையில், 40 கோடி சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளப்படும். இவற்றில் வெளிநாட்டுப் பயணங்கள் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சீனாவுடன் சேர்ந்து வசந்த விழாவை வரவேற்பதற்காக, உலகின் பல இடங்களில் விழா கொண்டாட்டங்கள் மற்றும் சுற்றுலாவுக்கு வசதியளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகின் பல இடங்களில் வசந்த விழா கொண்டாட்டங்கள்

2018ஆம் ஆண்டு தாய்லாந்துக்குச் சென்ற சீனப் பயணிகள் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது. இவ்வாண்டு சீனர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள வெளிநாட்டுச் சுற்றுலா இடங்களின் பட்டியலில் தாய்லாந்து முதலிடம் வகிக்கிறது.

உலகின் பல இடங்களில் வசந்த விழா கொண்டாட்டங்கள்

கடந்த ஆண்டின் நிலையைப் போன்று, ஜப்பான், தாய்லாந்திற்கு அடுத்து சீன சுற்றுலா பயணிகளிடையில் வரவேற்பைப் பெற்றுள்ள 2ஆவது நாடாகத் திகழ்கிறது. நடப்பு வசந்த விழாவின் போது சீனப் பயணிகளை வரவேற்று உபசரிப்பதில், ஜப்பான் அரசும் அரசு சாரா அமைப்புகளும் பெரும் கவனம் செலுத்தியுள்ளன.

உலகின் பல இடங்களில் வசந்த விழா கொண்டாட்டங்கள்

மேலும், வசந்த விழா விடுமுறையில் சீனப் பயணிகள் செல்ல விரும்பும் வெளிநாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்