வசந்த விழாவையொட்டி வெளிநாட்டு தலைவர்களின் வாழ்த்துக்கள்

வான்மதி 2019-02-05 17:10:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் வசந்த விழாவை முன்னிட்டு சில நாடுகளின் தலைவர்கள் பல்வேறு வழிமுறைகளின் மூலம் சீன அரசு, சீன மக்கள், வெளிநாடுகளில் வாழும் சீனர்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்களை வழங்கியதோடு, சீனாவுடன் தொடர்ந்து நட்புறவை வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

வசந்த விழாவையொட்டி வெளிநாட்டு தலைவர்களின் வாழ்த்துக்கள்

4ஆம் நாளிரவு ஜப்பானிய தலைநகரின் அடையாளக் கட்டிடமான டோக்கியோ கோபுரம் சீன வசந்த விழாவுக்கு சீன சிவப்பு நிறமுடைய ஒளிகளால் அலங்கரிக்கப்படுவது இதுவே முதன்முறை. இதற்காக காணொளி அனுப்பிய அந்நாட்டு தலைமை அமைச்சர் சீன மொழியில் அங்குள்ள சீனர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

வசந்த விழாவையொட்டி வெளிநாட்டு தலைவர்களின் வாழ்த்துக்கள்

பாகிஸ்தான் அரசுத் தலைவர் சீன ஊடகங்களின் மூலம் சீன அரசு மற்றும் மக்களுக்கு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புகளின் மூலம் இருநாட்டு செழுமை மற்றும் பிராந்திய அமைதிக்கு பங்காற்ற வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.

பிரிட்டன் தலைமை அமைச்சர் தெரசா மே அண்மையில் லண்டனிலுள்ள தலைமை அமைச்சர் மாளிகையில் சீன வசந்த விழாவுக்கான விருந்து அளித்தார். புத்தாண்டில் சீனாவுடன் இணைந்து இருநாட்டு ஒத்துழைப்புகளை மேம்படுத்தி மேலதிக சாதனைகளைப் பெறுவதை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

வசந்த விழாவையொட்டி வெளிநாட்டு தலைவர்களின் வாழ்த்துக்கள்

ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர், தாய்லாந்தின் இளவரசி, கம்போடிய தலைமை அமைச்சர், வங்கதேச தலைமை அமைச்சர், நியூசிலாந்து தலைமை அமைச்சர், ஆஸ்திரிய அரசுத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சர், பனாமா அரசுத் தலைவர், அர்ஜென்டீன அரசுத் தலைவர் உள்ளிட்டோரும் சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்