ஐ.நா. பாதுகாப்பவையின் விவாதத்தில் மா சாவ்சூ பங்கேற்பு

வான்மதி 2019-02-05 17:14:52
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா. பாதுகாப்பவையின் விவாதத்தில் மா சாவ்சூ பங்கேற்பு

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதியுமான மா சாவ்சூ பிப்ரவரி 4ஆம் நாள் ஐ.நா. பாதுகாப்பவையின் உயர் நிலை பொது விவாதத்தில் பங்கேற்றார்.

கூலிப்படையின் செயல்கள் ஆப்பிரிக்காவின் பாதுகாப்பற்ற மற்றும் உறுதியற்ற நிலைமைக்கு ஊற்றுமூலம் என்ற தலைப்பிலான இவ்விவாதத்தில் மா சாவ்சூ பேசிய போது, கூலிப்படையின் செயல்கள், வளரும் நாடுகள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளின் அமைதி மற்றும் நிலைப்புத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இதில் சர்வதேச சமூகம் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும், ஐ.நா. சாசனத்தை மீறியுள்ள கூலிப்படையின் செயல்கள், ஆப்பிரிக்க நாடுகள் உள்ளிட்ட வளரும் நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு, இந்த நாடுகளின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு தீங்குவிளைவித்துள்ளது. இதனை சீனா உறுதியாக எதிர்க்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், அமைதி, செழுமை மற்றும் வளர்ச்சிக்காக ஆப்பிரிக்க நாடுகளின் முயற்சிகளை சீனா எப்போதுமே ஆதரித்து வருகிறது. அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காப்பதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ளும் வகையில், சீன-ஆப்பிரிக்க அமைதி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான நிதியத்தை உருவாக்க சீனா முடிவெடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்