அமெரிக்க அரசுத் தலைவர் வழங்கிய நாட்டின் நிலைமை பற்றிய உரை

பூங்கோதை 2019-02-06 16:00:27
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க அரசுத் தலைவர் வழங்கிய நாட்டின் நிலைமை பற்றிய உரை

அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் பிப்ரவரி 5ஆம் நாளிரவு நாட்டின் நிலைமை பற்றி உரை நிகழ்த்தினார். எல்லை பகுதி கட்டுபாட்டை வலுப்படுத்துவது, சட்டவிரோதமாக குடியேறுவோர் அமெரிக்காவில் நுழைவதைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொள்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

டிரம்ப் நாட்டின் நிலைமை பற்றி உரை நிகழ்த்துவது இது 2வது முறையாகும். அமெரிக்க அரசியலின் பிரிவினையை அவர் இவ்வுரையில் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அரசியல் செயல்களில் பழி வாங்குவது, எதிர்ப்பு மற்றும் தண்டனையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

தவிர, அமெரிக்க-மெக்சிகோ எல்லை கட்டுபாட்டை வலுப்படுத்தி, எல்லை சுவரை கட்டியமைப்பது, இவ்வுரையின் முக்கிய அம்சமாகும். நாடாளுமன்றம் அடுத்த 10 நாட்களுக்குள், இதற்கான ஒரு சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தூதாண்மை பற்றி அவர் கூறுகையில், மத்திய கிழக்கு பகுதியின் மீது, “கோட்பாடு கொண்ட யதார்த்தவாதம்” என்ற கொள்கையை அமெரிக்கா நடைமுறைப்படுத்துகிறது. சிரியா மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைவீரர்களை குறைக்க வேண்டும் என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்துடன் முயற்சிகளை மேற்கொண்டு, பொருளாதாரத் துறையில், அடிப்படை வசதிக்கான முதலீடு பற்றிய சட்ட முன்மொழிவை ஏற்றுக்கொண்டு, புதிய மற்றும் முக்கியமான அடிப்படை வசதிகளிலும், முன்னேறிய தொழிற்துறையிலும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்