சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு

பூங்கோதை 2019-02-07 16:17:53
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு

சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 2019ஆம் ஆண்டின் வசந்த விழாவுக்கான விருந்து உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 6ஆம் நாளிரவு அமெரிக்காவிலுள்ள சீனத் தூதரகத்தில் நடைபெற்றது.

சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு

அமெரிக்காவுக்கான சீனத் தூதர் சுய் தியான்காய், இவ்விருந்தில் கலந்து கொண்டு, வசந்த விழா வாழ்த்துக்களைத் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது, 2019ஆம் ஆண்டு, சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவாகும். கடந்த 40 ஆண்டுகளாக, சீன-அமெரிக்க உறவு, இரு நாட்டு வளர்ச்சியை முன்னேற்றி, இரு நாட்டு மக்களுக்குப் பெரும் நன்மை புரிந்து வருகிறது. மேலும், சர்வதேச பிரச்சினைகளில், சீனாவும் அமெரிக்காவும் நெருங்கிய ஒத்துழைப்புகளை மேற்கொண்டு வருகின்றன. உலக அமைதி, நிலைப்புத் தன்மை, செழுமை ஆகியவற்றுக்கு, இரு நாடுகளும் முக்கிய பங்காற்றியுள்ளன என்றார்.

சீன-அமெரிக்கத் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 40ஆவது ஆண்டு நிறைவு


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்