உலக வங்கி தலைவர் பதவிக்கு டேவிட் மல்பாஸை பரிந்துரைத்தார் டிரம்ப்

வான்மதி 2019-02-07 16:22:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலக வங்கியின் புதிய தலைவர் பதவிக்கு அமெரிக்க நிதித்துறை துணை அமைச்சர் டேவிட் மல்பாஸை அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் 6ஆம் நாள் பரிந்துரை செய்தார்.

வெள்ளை மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற பரிந்துரை நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், அமெரிக்க நிதித் துறையின் துணை அமைச்சராக மல்பாஸ் பணிபுரியும் காலத்தில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றுடன் தொடர்புடைய விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று வருகிறார். பொருளாதாரம், நிதி, தூதாண்மை கொள்கை ஆகிய துறைகளில் அவருக்கு 40 ஆண்டுகளுக்கு மேலான அனுபவங்கள் உண்டு. உலக வங்கி தலைவர் பதவிக்கு அவர் சரியான நபர் என்று குறிப்பிட்டார்.

தற்போது 62 வயதான டேவிட் மல்பாஸ், ரோனல்ட் ரீகன் மற்றும் ஜார்ஜ் H.W. புஷ் ஆட்சி காலத்தில் அதிகாரியாக பதவியேற்றார். 2016ஆம் ஆண்டு அமெரிக்க அரசுத் தலைவர் பதவிக்கு டிரம்ப் போட்டியிட்ட போது, மல்பாஸ் அவரது பொருளாதார ஆலோசகராகப் பணிபுரிந்தார்.

பலதரப்பு சர்வதேச நிறுவனங்கள் மீது மல்பாஸ் நம்பிக்கை இல்லா நிலைப்பாடு கொண்டிருப்பதால், அவருக்கான பரிந்துரை உலக வங்கியின் இதர உறுப்பினர்களின் எதிர்ப்பை சந்திக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்