ரஷியாவுக்கான சீனத் தூதரகத்தில் ரஷியத் தலைமையமைச்சரின் பயணம்

பூங்கோதை 2019-02-08 16:04:44
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ரஷியாவுக்கான சீனத் தூதரகத்தில் ரஷியத் தலைமையமைச்சரின் பயணம்

ரஷியத் தலைமையமைச்சர் டிமிட்ரி மெட்வெடேவ் பிப்ரவரி 7ஆம் நாள், ரஷியாவுக்கான சீனத் தூதரகத்திற்குச் சென்றார். அங்கு, சீனர்களுக்கு வசந்த விழா நல்வாழ்த்துக்களைத் தெரிவித்த அவர், தூதரகத்தின் பணியாளர்களுடன் வசந்த விழாவைக் கூட்டாக கொண்டாடினார்.

மேலும், ரஷியாவுக்கான சீனத் தூதர் லீ ஹுய்யுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது, புதிய ஆண்டில், சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்பு கூட்டாளி உறவின் வளர்ச்சியையும், இரு நாடுகளுக்கிடையிலான பயன்தரும் ஒத்துழைப்புகளையும் முன்னேற்றும் வகையில் சீனாவுடன் ஆக்கப்பூர்வமான தொடர்பு கொள்ள ரஷியா விரும்புகிறது. 2019ஆம் ஆண்டு, சீன-ரஷிய தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில், ரஷியாவுக்கான சீனத் தூதரகத்தில் எனது இப்பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார்.

மேலும், ரஷியத் தலைமையமைச்சர், ரஷியாவுக்கான வெளிநாட்டுத் தூதரகத்தில் பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும். சீன-ரஷிய பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளி உறவின் முக்கியத்தை இது வெளிப்படுத்தியுள்ளது என்று ரஷியச் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்