பிரிட்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை:ஜுங்கர்

வான்மதி 2019-02-08 16:41:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பிரிட்டனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை:ஜுங்கர்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது குறித்து பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்றாலும், ஐரோப்பிய ஒன்றித்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே எதிர்கால உறவு பற்றிய அரசியல் அறிக்கையிலுள்ள சில அம்சங்களைத் திருத்த விரும்புகிறது என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜுங்கர் 7ஆம் நாள் பிரசல்சில் தெரிவித்தார்.

பிரிட்டன் தலைமை அமைச்சர் தெராசா மே அம்மையார் வியாழக்கிழமை பிரசல்ஸ் சென்றடைந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டின் விலகும் உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தையை மீண்டும் நடத்துவது குறித்து ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜுங்கர், ஐரோப்பிய பேரவைத் தலைவர் டொனால்ட் துஸ்க், ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் தஜானி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தெராசா மேயுடன் வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவதற்கான உடன்படிக்கை, இருதரப்பும் ஒன்றுக்கொன்று சமரசம் செய்த பிறகு உருவாக்கப்பட்டது என்றும், எந்த தீர்வு முறையும் இதர 27 உறுப்பு நாடுகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும் ஜுங்கர் குறிப்பிட்டார்.

மேலும், பிப்ரவரி இறுதிக்குள் இப்பிரச்சினை குறித்து மீண்டும் சந்திப்பு நடத்த உள்ளதாகவும் அவர்கள் கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்