ஐ.நா தலைமையகத்தில் “உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனப் படை” கண்காட்சி

பூங்கோதை 2019-02-13 10:31:02
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா தலைமையகத்தில் “உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனப் படை” கண்காட்சி

“உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனப் படை” என்ற தலைப்பிலான கண்காட்சி உள்ளூர் நேரப்படி பிப்ரவரி 11ஆம் நாளிரவு நியூயார்கிலுள்ள ஐ.நாவின் தலைமையகத்தில் துவங்கியது.

ஐ.நா தலைமையகத்தில் “உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனப் படை” கண்காட்சி

ஐ.நாவுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி மா சாவ்ஷூ துவக்க விழாவில் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், அமைதி காப்புக்கான ஐ.நாவின் நடவடிக்கைகளுக்குச் சீனா உறுதியாக ஆதரவு அளித்து, இதில் ஆக்கமுடன் கலந்து கொண்டு வருகின்றது. உலக அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதில் சீனாவின் செயல்களையும், சாதனைகளையும் இந்நிழற்படங்கள் வெளிப்படுத்துகின்றன என்றார்.

ஐ.நா தலைமையகத்தில் “உலக அமைதியைப் பேணிக்காக்கும் சீனப் படை” கண்காட்சி

மேலும், அமைதி காப்புக்கான ஐ.நாவின் நடவடிக்கைகளுக்கு சீனாவின் பங்களிப்பு குறித்து, ஐ.நாவின் துணைத் தலைமைச் செயலாளர் அத்துல் கரே வெகுவாக பாராட்டினார். அத்துடன், அமைதி காப்புக்கான சீனாவின் உறுதியான ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்