நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் டிரம்ப் கையெழுத்து

இலக்கியா 2019-02-16 15:23:07
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க நாடாளுமன்ற மேலவையும் கீழவையும் நிறைவேற்றிய நிதி ஒதுக்கீட்டு மசோதாவில், அரசுத் தலைவர் டிரம்ப் 15ஆம் நாள் கையெழுத்திட்டார். இவ்வாண்டின் செப்டம்பர் 30ஆம் நாளுக்குள், கூட்டாட்சி அரசு நிறுவனங்கள் சிலவற்றுக்கு நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாடாளுமன்ற அனுமதியின்றி, எல்லை சுவர் கட்டுமானத்துக்கான கட்டணத்தைத் திரட்டும் வகையில், தேசிய அவரச நிலையைப் பிறப்பிப்பதாக, டிரம்ப் 15ஆம் நாள் வெளியிட்ட பொது அறிக்கையில் தெரிவித்தார். இச்செயல், ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களிடையே சந்தேகத்தையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியதோடு, குடியரசுக் கட்சியில் உள்கட்சி சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்