புதிய யுகத்தில் சீன-ஜப்பான் உறவு:ஷிச்சின்பிங்

இலக்கியா 2019-06-27 19:55:08
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், 27ஆம் நாளிரவு ஒசாகாவில் ஜப்பான் தலைமையமைச்சர் சின்சோ அபேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், இவ்வாண்டு, சீன-ஜப்பான் உறவு முன்னேற்றம் அடைவதற்கான புதிய வரலாற்றுத் துவக்கப் புள்ளியாகும். ஜப்பானுடன் சேர்ந்து, புதிய யுகக் கோரிக்கைக்குப் பொருந்திய இரு தரப்புறவை உருவாக்கப் பாடுபட சீனா விரும்புகிறது என்றார்.

மேலும், நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில், உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு உந்து சக்தியை ஊட்டும் வகையில், பல்வேறு தரப்புகள், ஒத்த கருத்துகளை எட்டி, பலதரப்புவாதத்தையும் தாராள வர்த்தகத்தையும் பேணிக்காக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்