பெய்ஜிங்கில் நடைபெற்ற சீன-இந்திய மானுட பண்பாட்டுப் பரிமாற்றக் கூட்டம்

2019-08-12 20:42:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மானுட பண்பாடு தொடர்பான உயர்நிலை பரிமாற்ற முறைமையின் 2ஆவது கூட்டம் ஆகஸ்டு 12ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீயும், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கரும் இணைந்து இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கினர்.

இதில், கல்வி, கலாச்சாரம் மற்றும் தொல்பொருட்கள் பாதுகாப்பு, சுற்றுலா, ஊடகம், இளைஞர், விளையாட்டு, திரைப்படம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து, இரு தரப்பு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பில் புதிய முன்னேற்றங்களை அறிமுகப்படுத்தியதோடு, அடுத்த காலக்கட்டத்தில் புதிய திட்ட வரைவுகளையும் விவரித்துள்ளனர்.

இக்கூட்டத்துக்குப் பிறகு, வாங் யீயும் ஜெய்ஷங்கரும் 2020ஆம் ஆண்டு சீன-இந்திய வெளியுறவு அமைச்சகங்களின் ஒத்துழைப்புக்கான செயல்பாட்டுத் திட்டம் என்ற ஆவணத்தில் இணைந்து கையெழுத்திட்டனர். மேலும், அவர்களின் முன்னிலையில், பண்பாடு, விளையாட்டு, பராம்பரிய மருத்துவம், அருங்காட்சியகம் உள்ளிட்ட மானுடப் பண்பாட்டுத் துறைகளைச் சேர்ந்த இரு தரப்பு ஒத்துழைப்பு ஆவணங்களும் கையெழுத்தானது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்