சீன-இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை

வான்மதி 2019-08-12 20:49:50
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங்யீயை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் சந்தித்து ஆகஸ்டு 12ஆம் நாள் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வாங்யீ கூறுகையில், உலகில் 100 கோடிக்கு மேலான மக்கள் தொகை கொண்ட இரண்டு பெரிய வளரும் நாடுகளாவும், புதிய சந்தை வாய்ப்பு கொண்ட பொருளாதாரச் சமூகங்களின் பிரதிநிதிகளாகவும் விளங்கும் சீனாவும் இந்தியாவும், புதிய வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளன. சமாதான சகவாழ்வுக்கான 5 கோட்பாடுகளை இருநாடுகள் பின்பற்றி, ஒன்றுடன் ஒன்று நட்பார்ந்து பழகி, ஒன்றுக்கொன்று நலன் தரும் முறையில் ஒத்துழைப்பது, இருநாட்டு மக்களின் அடிப்படை மற்றும் நீண்டகால நலன்களுக்குப் பொருத்தமானது. இது உலகின் அமைதி மற்றும் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கும் புதிய பங்காற்றும் என்று தெரிவித்தார்.

ஜெய்ஷங்கர் பேசுகையில், தற்போதைய உலகில் உறுதியற்ற தன்மை அதிகம். இந்திய-சீன உறவு உலக அரசியலில் சிறப்புமிக்க முக்கியமான தகுநிலையைக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டில் இருநாட்டுத் தலைவர்கள் வூஹான் நகரில் அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பை வெற்றிகரமாக நடத்தினர். இது இருநாட்டுறவின் வளர்ச்சியை பெரிதும் மேம்படுத்தியுள்ளது. இவ்வாண்டில் இத்தகைய சந்திப்பு இந்தியாவில் நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். இச்சந்திப்பு இனிதே வெற்றி பெற உறுதிசெய்யும் வகையிலும் இருநாட்டுறவை புதிய நிலைக்குக் கொண்டு வரும் வகையிலும் சீனாவுடன் இணைந்து தொடர்பை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது என்று குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாகக் கொண்டு முறையான பேச்சுவார்த்தைகளின் பங்கினை வெளிகொணர்ந்து, மேலதிக ஒத்துழைப்பு பயன்களைப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்