ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.நாவின் கண்டனம்

பூங்கோதை 2019-08-19 10:43:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் ஆகஸ்டு 17ஆம் நாளிரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா உதவி குழு 18ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தது.

காபூலின் மேற்கு பகுதியிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் 17ஆம் நாளிரவு தற்கொலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 63 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேலானோர் காயமுற்றனர். இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்பதாக ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்