ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கையின் நிறுத்தம்:ஈரான் அரசுத் தலைவர் ருஹானி

வாணி 2019-09-05 11:06:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்கை நடைமுறையாக்கத்தை நிறுத்துவதற்கான 3ஆவது கட்ட நடவடிக்கைகளை ஈரான் விரைவில் அறிவிக்கவுள்ளது என்று அந்நாட்டின் அரசுத் தலைவர் ஹசன் ருஹானி 4ஆம் நாள் தெரிவித்துள்ளார்.

இதனிடையில், ஈரான் அணு ஆற்றல் அமைப்பின் அதிகாரி ஒருவர் 3ஆம் நாள் கூறுகையில், தொடர்புடைய நாடுகள் தகுந்த கடப்பாட்டை நிறைவேற்றாமல் இருந்தால், 20 விழுக்காடு செறிந்த அளவுடைய யுரேனியத்தின் உற்பத்தியை ஈரானால் 2 நாட்களுக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்று தெரிவித்தார்.

அணு குண்டுத் தயாரிப்புக்கு 90 விழுக்காடு செறிந்த அளவுடைய யுரேனியம் தேவைப்படுகின்றது. ஆனால், தொழில் நுட்ப ரீதியில் 20 விழுக்காடு செறிந்த அளவுடைய யுரேனியத்தின் உற்பத்திக்கும் 90 விழுக்காடு யுரேனியத்தின் உற்பத்திக்கும் இடையில் அதிக இடைவெளி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்