மனித உரிமை பிரச்சினை பற்றி சீனப் பிரதிநிதியின் கருத்து

2019-09-07 16:15:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.நா மனித உரிமை செயற்குழுவின் 42ஆவது கூட்டத்தொடர் துவங்குவதை முன்னிட்டு,

ஐ.நாவின் ஜெனிவா அலுவலகம் மற்றும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள இதர சர்வதேச அமைப்புகளுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி சேன் சூ 6ஆம் நாள் ஜெனிவாவில் செய்தியாளர் கூட்டம் நடத்தி, உலக மனித உரிமை நிர்வாகம் மற்றும் மனித உரிமை செயற்குழுவின் 42ஆவது கூட்டத்தொடர் குறித்து சீனாவின் கருத்துக்களை விவரித்தார்.

தற்போது, சர்வதேச நிலைமையில் உறுதியற்ற காரணிகள் அதிகரித்து, ஒரு தரப்புவாதம் மற்றும் பாதுகாப்புவாதம் தலைதூக்கி வருகின்றன. இந்நிலையில், பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, ஐ.நாவை மையமாக கொண்ட பலதரப்பு முறைமையைச் சீனா உறுதியாகப் பேணிகாக்கும். பகைமைக்கு பதிலாக பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பைப் பல்வேறு தரப்புகள் ஆதரிக்க வேண்டும். பல்வகை மனித உரிமைகளைச் சரியாக முன்னேற்ற வேண்டும். பன்னாட்டு மக்கள் சுயமாக தெரிவு செய்யும் மனித உரிமை வளர்ச்சிப் பாதையை மதிக்க வேண்டும். உலக மனித உரிமை நிர்வாகம், மேலும் நியாயமான திசையை நோக்கி வளர்வதை முன்னேற்ற வேண்டும் என சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 70 ஆண்டுகளில், சீனாவின் மனித உரிமை இலட்சியத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இது வரை 85 கோடி சீனர்கள் வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதோடு, உலக அளவில் மிகப் பெரிய கல்வி, சமூகக் காப்புறுதி, மருத்துவ சிகிச்சை மற்றும் அடிமட்ட ஜனநாயக முறைமையை சீனா உருவாக்கி, உலக மனித உரிமை நிர்வாகத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுத்து, பன்னாடுகளுடன் மனித உரிமை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைப் பரந்துபட்ட அளவில் மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்