சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை

2019-09-08 15:43:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவை உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங் யீ 7ஆம் நாள் இஸ்லாமாபாதில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பாகிஸ்தானுடன் இணைந்து, இரு நாட்டுத் தலைவர்கள் எட்டிய முக்கிய பொது கருத்தைச் செயல்படுத்தி. நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்த வேண்டும் என்றும், பல்வேறு நிலைகளில் நெருங்கிய பரிமாற்றத்தை நிலைநிறுத்தி, பல்வேறு துறைகளிலான எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, சீன-பாகிஸ்தான் பொருளாதார பாதை ஆக்கப்பணியை முன்னேற்றி, சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இரு தரப்பின் பொது நலன்களைப் பேணிகாக்க சீனா விரும்புவதாகவும் வாங் யீ தெரிவித்தார்.

சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 70ஆம் ஆண்டு நிறைவுக்கு குரேஷ் வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான்-சீன பொருளாதார வழித்தடம் ஆக்கப்பணியை பாகிஸ்தான் மக்கள் ஆதரிகப்பதாகக்.குறிப்பிட்ட அவர், தெற்காசியாவின் அமைதி மற்றும் நிதானத்தைப் பேணிகாக்க சீனா ஆற்றியுள்ள பங்கினை வரவேற்று, பிரதேச மற்றும் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக சீனாவுடன் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்